அதிபர் சேவையில் இரண்டாயிரம் பேர் விரைவில் இணைக்கப்படவுள்ளனர் எனவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வியியற் கல்வியில் ஆசிரியர் போதனா பயிற்சி நெறியை பூர்த்தி செய்தோருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (08) அலரி மாளிகையில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
விஞ்ஞானம் மற்றும் கணித பாட கற்கை நெறிக்கான புதிய கல்வியியற் கல்லூரிகளை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். தற்போது நாட்டில் 20 கல்வியியற் கல்லூரிகள் உள்ளன. விரைவில் புதியவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதை அரசாங்கத்தில் அதிபர் சேவையில் இதுவரையில் நான்காயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வெகுவிரைவில் மேலும் இரண்டாயிரம் பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.