அரச ஊழியர்களுக்கான ஆடை தொடர்பில் புதிய அறிவித்தல்

அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (10) கலந்து அமைச்சர் இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும். இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய ஸ்டைல்களை அறிமுகம் செய்யப் போவதாக அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில்இ பத்திக் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்துஇ அவர்களுக்கு NVQ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். துறைசார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435