வட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்படவிருந்த நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய நேர்முகத்தேர்வினுடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
நீண்ட காலமாக கொடுப்பனவுகள் எதுவுமின்றி சுகாதார தொண்டர்களாக பணியாற்றிவரும் சுமார் 454 பேரை சேவையில இணைப்பதற்கான முயற்சிகள் கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் க.பொ.த சாதாரண தர சித்தியுடன் சேவையில் இணைக்க அனுமதி கிடைத்த நிலையில் ஏற்கனவே குறித்த 454 பேருடன் கூட்டுறவினூடாக சேவையாற்றியவர்கள் தவறவிடப்பட்டவர்கள் என மேலும் இணைக்கப்பட்டதால் இறுதியில் சுமார் 2,200 பேர் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டனர். அவர்களில் கடந்த வருடம் க.பொ.த உயர்தரத்தில் பரீட்சையில் தோற்றியவர்கள் வரை உள்ளடங்குவர். இவர்கள் சுகாதார தொண்டர்களாக பணியாற்றினார்கள் என பிராந்திய சுகாதார பணிமனைகளில் கடிதங்களை பெற்று வந்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேர்முகத்தேர்வில் கல்வித் தகமை மற்றும் ஆண்டுகளுக்கு அதிகமாக புள்ளிகள் வழங்கப்பட்டமையினால் உண்மையிலேயே நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் பாதிக்கப்பட்டு. அண்மையில் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் போராட்டம் நடத்தியமையினால் கடந்த 5ம் திகதி வழங்கவிருந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டது. மீண்டும் 17, 18ம் திகதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி- jaffnazone.com