வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு

வட மாகாண பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு இன்று (28) வட மாகாண கல்வியமைச்சில் ஆரம்பமானது.

இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வதற்கு க.பொ.உயர்தர பரீட்சையில் ஒரே முறையில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்ற 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் குறித்த பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த பாடசாலைகளில் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்ற சேவை நிபந்தனை உள்ளமையினால் அப்பாடசாலை அதிபர்களிடமிருந்து சேவைக்காலத்தை உறுதிப்படுத்தக்கூடிய கடிதங்களுடன் நேர்முகத்தேர்விற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை பூர்த்தி செய்து இறுதி பரீட்சையில் சித்தியடையவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை பூர்த்தி செய்தால் மட்டுமே ஆசிரியர் சேவை தரம் 111 இற்கு உள்ளீர்க்கப்பட்டு ஓய்வூதிய உரித்துடைய சேவையில் நிரந்தர நியமனம் செய்யப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435