‘சட்டப்படி ​வேலை” தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் திணைக்கள ஊழியர்

இன்று (19) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

லொக்கோமோட் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கத்தைச் சார்நதலால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று நாம் ஆரம்பிக்கும் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கைக்கு சரியான பதில் கிடைக்காதபட்சத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் கட்டளை அதிகாரிகள், சாரதிகள், நிலைய கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில் கண்காணிப்பாளர் கலந்துகொள்ளவுளளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435