ஆசிரியர் சேவைகள் சங்கம் இன்றும், நாளையும் போராட்டம்

  1. ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அத்துடன்,  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம ஒன்றை நடத்த உள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர், அதிபர் போராட்டத்திற்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் மீண்டும் இன்றும், நாளையும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

22 வருடங்களாக ஆசிரியர் அதிபர்கள் எதிர்நோக்கிவரும் பி.சி. பெரேரா சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல், அரசியல் பழிவாங்கல்கள் எனும் போர்வையில் இடம்பெறும் நிபந்தனைகள் மற்றும் வரப்பிரசாதங்களையும் உடனடியாக நீக்குதல், கடதாசி நிரப்புதல் உட்பட ஆசிரியர் அதிபர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் மேலதிக வேலைகளை நிறுத்தி மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான காலத்தை உரிய வகையில் வழங்குதல், பெற்றோரிமிருந்து பணம் அறவிடுவதை நிறுத்தி மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்குதல், 2016ம் ஆண்டு இல்லாதொழிக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குதல், பிரிவனா மற்றும் நிதியுதவி பெறும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்குதல் போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் நடத்தப்படுவதாக ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435