அரச நிறுவனங்களில் தொடர்ச்சியாக நியமனங்கள் பெற்றுக்கொடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகளுக்கு தௌிவுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெபரல் அமைப்பு அரச நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியிடம் கோரியுள்ளார்.
தேர்தல் காலத்தில் அதிகாரிகளை சேவையில் இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு நடத்தல், சேவையில் இணைத்தல், பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் என்பவற்றை செயற்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பல சந்தர்ப்பங்களில் சுற்றுநிரூபத்தினூடாக தெரியப்படுத்தியிருந்த போதிலும் நாட்டின் பல பாகங்களில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும் பயிற்சி நிகழ்வுகள், மாநாடுகள் என்ற போர்வையில் பல்வேறு விடயங்கள் நடப்பதை காணக்கூடியதாக உள்ளது என ஏற்கனவே அரச நிருவாக அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.