அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுளள் 2500 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சத்தோச நிறுவன ஊழியர்கள் இன்று (30) போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் தொடக்கம் அரச ஊழியர்களின் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டுள்ள 2500 ரூபா சம்பளப் பணத்தை உடனடியாக தமக்கும் வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கான நிலுவை கொடுப்பனவையும் சேர்த்து வழங்குமாறு தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு வழங்கப்படாவிட்டால் சத்தோச நிறுவனத்தை மூடிவிட்டு தொழிற்சங்க நடவடிக்கை தொடரவுள்ளதாக சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹைட்பார்க்கில் பவனியை ஆரம்பித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வொக்சோல் வீதியில் அமைந்துள்ள சத்தோச பிரதான காரியாலயம் சென்று அதற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.