​தொழிற்சங்கங்களுக்கு உத்தரவாத கடிதம்

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் – அமைச்சரவை உபகுழுவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் – தொழிற்சங்கங்களுக்கு உத்தரவாதக் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆசிரியர், அதிபர் சேவைகளிலிருக்கும் சம்பள முரண்பாடுகளை தீர்த்தல்

அதிபர்,ஆசிரியர் சேவையிலிருக்கும் சம்பள முரண்பாடு தொடர்பாக 2019.09.30 திகதி திறைசேரியில் நடந்த கலந்துரையாடலில்

2. 2019.09.27 நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி – சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடி – அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவினால் அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினை சம்பந்தமாக தீர்வு காணும்படி பரிந்துரைத்தல்-

1. கௌரவமான ஒரு உத்தியோகமாக கருதப்பட்டு அதிபர், ஆசிரியரின் சேவைகளுக்கான                     ஆரம்ப சம்பளநிலை கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

2. முதலாவது கட்டமாக ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக மாற்றி –                                    அதற்கு முறையான சம்பளதிட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆணைக்குழு ஒன்றை                              நியமித்தல்.

3. இந்த பரிந்துரை 2019.10.01 நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கின்றோம்.

ஒப்பம்;
அமைச்சர்கள் –
ரவூப் ஹக்கீம்
ராஜித சேனாரத்ன
ரஞ்சித் மத்தும பண்டார
அசோக அபேசிங்க
ஹர்ஷ டீ சில்வா
எரான் விக்கிரமரத்ன

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435