தனியார் பேருந்து சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

20சதவீத கட்டண அதிகரிப்பு அவசியம்

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்வில் தமக்கு திருப்தி இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்த குமார, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கதின் தலைவர் கெமுனு விஜேரத்ன மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன ப்ரியஞ்சித் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அரச மற்றும் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.

எனினும், அதிகரிக்கப்பட்ட எரிபொருள் உயர்வுக்கு ஏற்றவாறு தம்மால் கோரிக்கை விடுத்த அளவு பேருந்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என தனியார் பேருந்து சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த நிலையில், அரசாங்கத்தின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.

15 முதல் 20 சதவீத கட்டண அதிகரிப்பைக் கோரியும், ஆகக் குறைந்த கட்டணத்;தை 15 ரூபாவாக அதிகரிக்கக் கோரியும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்து சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435