ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் மட்டு வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படாவிடின் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கூடிய வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 2000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். வேலையற்ற பட்டதாரிகள் மாத்திரமன்றி அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் இம்முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக இச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது தீர்மானம் மற்றும் கோரிக்கையடங்கிய கடிதம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகள் நான்கின் வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே நாம் பல தடவைகள் ஏமாற்றப்பட்டு விட்டோம். இனியும் ஏமாற்றாமல் எமக்கு தொழில்வாய்ப்பை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று வேலையற்ற பட்டதாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி தொழிவாய்ப்பை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435