பிரதமர் தலைமையிலான பேச்சிலும் 1,000 ரூபா குறித்து இறுதிமுடிவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (17) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக இந்த சந்திப்பில் பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை எதிர்வரும் 25 ஆம் திகதி பிரதமர் தலைமையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435