ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு – மீண்டும் இன்று பேச்சுவார்த்தை

தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் அரச அதிகாரகளுக்கும் இடையில் பேச்சுவார்தையொன்று இன்று (04) நடைபெறவுள்ளது.

இப்பேச்சுவார்தையில் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படுமாயின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடுவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு கோரி தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் சேவையிலிருந்த நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று உத்தியோகப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ள போதிலும் தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை தொடரப்போவதாக ரயில்வே தொழிற்ங்கங்கள் அறிவித்துள்ளன.

தமக்குள்ள சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு கோரி கடந்த 24ம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்தன. இப்போராட்டத்தில் ரயில்நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், சாரதி கட்டுப்பாளர்கள் சங்கம், மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் சங்கம் என்பன கலந்துகொண்டன. சேவைக்கு சமூகமளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சேவையை விட்டு நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று நேற்றுமுன்தினம் (2) கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில ஊழியர்கள் நேற்று (03) சேவைக்கு திரும்பியிருந்தனர். அதனால் கடந்த 24ம் திகதி நள்ளிரவு தொடக்கம் பயணித்த சில ரயில்களுக்கு மேலதிகமாக நேற்று 8 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ன.

எனினும் பயணிகள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இம்மாதத்திற்கான ரயில் சீட்டுக்கள் இதுவரை வழங்கப்படவுமில்லை.

இந்நிலையில் தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வினை வழங்க அரச அதிகாரிகள் சம்மதித்த போதிலும் திணைக்கள அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று தொழிற்சங்கங்கள் விசனம் வௌியிட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435