வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவின் கணினிகளின் கட்டமைப்புக்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் வசித்து வரும் மற்றும் சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ், கல்வி மற்றும் வெளிநாட்டு பயணம் செய்தல், பிற ஆவண சான்றிதழ்கள் சேவைகளை வழங்கிவரும் வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவின் கணினிகளின் அமைப்புக்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரிவின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சீர்செய்யும் பணிகளில் கணினி நிபுணர்கள் குழு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.