பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்து, நியமனம் கிடைக்காதவர்கள், தங்களது பிரதேச செயலாரிடம் மேன்முறையீட்டை கையளிக்கலாம் என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெருமளவான பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்போது பிரச்சினைகள் ஏற்படலாம்.
எனவே, பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்து, ஏதோ ஒருவகையில் நியமனம் கிடைக்காதமை தொடர்பில் பிரச்சினை உள்ளவர்கள், தமது பிரதேச செயலாளரிடம் மேன்முறையீட்டை கையளிக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.