நோர்வுட் பிரதேசசபையின் கீழ் தொழில்புரியும் உத்தியோகத்தர் ஒருவருக்கு இம் மாத வேதனம் வழங்காபடாமை குறித்தும் குறித்த உத்தியோகத்தர் தொடர்ந்தும் நோர்வுட் பிரதேசசபையின் தலைவரினால் பழிவாங்கப்பட்டு
வருகின்றமை தொடர்பில் அதன் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (24) காலை பொகவந்தலாவ சிறி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக சிதறு தேங்காய் உடைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
குறித்த உத்தியோகத்தர் நீராடி தேங்காயில் கற்புறம் ஏற்றியவாறு நோர்வுட் பிரதேச சபையில் இருந்து பொகவந்தலாவ டின்சின் சிறி சித்தி விநாயகர் ஆலயம் வரை பேரணியாக வந்து ஆலயம் முன்பாக இந்த எதிர்ப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டார்.
நான் முறையாக தொழிலுக்கு சென்றாலும் என்னை சாக்குபோக்கு கூறி என்னை தொடர்ந்தும் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் இது தொடர்பில் நான் உள்ளுராட்சி சபைகளுக்கு பொருப்பான ஆனணயாளர் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், நாட்டின் ஜனாதிபதி, மத்திய மாகாண ஆளுனர் ஆகியோருக்கும் அறிவித்த போதும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கபட வில்லையென தெரிவித்தார்.
இதேவேலை இன்னும் இரண்டொரு தினங்களில் தீபாவளி பண்டிகை வருகிறது இந்த மாத்திற்கான வேதனத்தையும் நோர்வுட் பிரதேசசபை தலைவர் நிறுத்தி வைத்து கொண்டார் இந்த நோர்வுட் பிரதேச சபையின் பழிவாங்கல் தொடர்பில் உறிய நடவடிக்கை எடுக்கபட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்,