தேர்தலன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காலைநேரம் விடுமுறை வழங்க கோரிக்கை

தேர்தல் தினத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காலை 7 மணிமுதல் மதியம் 12மணிவரை விடுமுறை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதில் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 7 மணிமுதல் மதியம் 12மணிவரை வாக்களிப்புக்கான சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது.

வாக்களித்ததை அடுத்து, மதியம் 12 மணிக்குப் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

கடந்த காலங்களில் தேர்தலன்று காலை நேரங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டமையினால், காலையில் அவர்கள் வாக்களிப்பில் பங்கேற்கும் வீதம் குறைவாக இருந்துவந்துள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாம் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதில் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435