பிறக்கவிருக்கும் புத்தாண்டில் புதிய ஜனாதியிடம் எமது வேண்டுகோள்

தேர்தல் சூடு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ள நிலையில் நத்தார், புதுவருட எதிர்பார்ப்புக்களே அநேகரிடம் காணப்படுகிறது.

அதிகூடிய வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவாகிய கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விடவும் 52 வீதத்திற்கும் அதிகமான (சஜித் 42 வீதம்) வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடிக்கொண்டார். கடந்த ஆட்சிகாலத்தில் அவர் பாதுகாப்பு செயலாளராக நாட்டுக்கு ஆற்றிய சேவையே அவருடைய இந்த வெற்றிக்கு காரணமாகியது. 2009ம் ஆண்டு பிரிவினைவாத எல்டிடிஈ இயக்கத்தை தோற்கடித்த பின்னர் அவரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளும் காரணமாயிற்று.

பொறுப்புமிக்க நிறுவனங்களை பலப்படுத்தியதனூடாக தேசிய பாதுகாப்பை பலப்படுத்தல் (உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குலின் போதான குறைபாடுகளை கவனத்திற்கொண்டு), பலமான இறையாண்மை மிக்க இனத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் என்பவற்றினூடாக ஊழல் துஷ்பிரயோகங்களை முடிவுக்கு கொண்டு வருதல் என கோட்டாபய அவருடைய கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்துள்ளார்.

பாலின அடிப்படையிலான வன்முறைகளை அறிக்கையிடுதலில் உள்ள செயற்பாட்டை புனரமைப்புச் செய்தல், அரச ஊழியர்களின் செயற்பாட்டுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் சட்ட திட்டங்களை திருத்துதல் மற்றும் உழைக்கும் வர்த்தகத்தின் எண்ணிக்கையை மேம்படுத்தி அரச நிறுவனங்களின் உரிய துறைகளின் அபிவிருத்திக்காக பயன்படுத்தல் என்பன தொடர்பில் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்த நீண்ட காலம் எடுக்கமாட்டார் என்றும் இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தினர் அவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் என்பவற்றினூடாக நேர்மறையான 2020 நோக்கு கொண்டு செல்வார் என்று நம்புகிறோம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435