ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நியமனம் பெற்ற அபிவிருத்தித் திட்ட உதவியாளர்கள் கடமைக்கு சமூகமளித்த போது திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டச் செயலகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமது கடமைகளை பொறுப்பேற்க காலி மாவட்டச் செயலகத்திற்கு சென்றவர்களை கடமையை பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டமையினால் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் காலி மாவட்ட மேலதிக செயலாளரிடம் வினவியபோது தேசிய கொள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் குறித்த நியமனம் தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறியத்தந்த பின்னர் இந்நியமனம் வழங்கல் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.