அரச நிறுவனங்களில் அவசியமற்ற முறையில் இடம்பெறும் செலவுகளை தவிர்ப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தினால் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து செலவுகளையும் முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து அமைச்சர்களும், தங்களின் அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் செலவுகள் தொடர்பிலும் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன்புரி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவீனங்களை, அதே முறையில் முன்னெடுக்குமாறும், குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றில் சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.