இரண்டாம் தவணைப்பரீட்சைக்கான வினாப்பத்திரம் தயாரிப்பு, அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் என்பன மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் அவசரஅவசரமாக செய்ய திட்டமிட்டமையினால் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் மத்திய கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய வருடங்களில் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்கள் பாடசாலைகள் மூலமாகவும் இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினூடாகவும் தயாரிக்கப்படும். இம்முறை பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதால் பாடசாலை அதிபர்களை வினாத்தாள்களை தயாரிக்கவேண்டாம் என்றும் அந்நடவடிக்கையை திணைக்களம் மேற்கொள்ளும் என்றும் சுற்றுநிரூபமொன்றை திணைக்களம் அனுப்பியுள்ளது. இவ்வினாத்தாள்களுக்கு ஒரு மாணவனிடமிருந்து 65 ரூபா சேகரிக்கப்பட்டதாகவும் திஸாநாயக்க விசனம் தெரிவித்துள்ளார்.