இலங்கை புகையிரத திணைக்களத்தில் 7000 வெற்றிடங்கள்

இலங்கை புகையிரத திணைக்கள சேவைக்கு சுமார் 20,000 ஊழியர்கள் தேவைப்பட்டபோதிலும் தற்போது 13,000 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்று திணைக்கள அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள வீதி போக்குவரத்து அமைச்சின் கேட்போர்கூடத்தில் வீதி போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இலங்கை புகையிரத திணைக்கள அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வூழியர் பற்றாக்குறையானது கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் நிலவி வந்துள்ளதாகவும் அதனால் புகையிரத திணைக்கள சேவைகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புகையிரத பாதை பராமரிப்பு, புகையிரத நிலைய செயற்பாடுகள் மற்றும் ஏனைய நிருவாக செயற்பாடுகளில் ஆள்பற்றாக்குறையினால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆள் பற்றாக்குறை காரணமாக சில ஊழியர்களுக்கு மாதாந்தம் சுமார் 350 -400 மணித்தியாலங்கள் மேலதிக சேவையில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 37 மணிநேரம் பணியாற்றிய ஊழியர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தரத்தில் தற்போது காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் அமைச்சரவையை தௌிவுபடுத்துதற்கான அறிக்கையை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் தேசிய ​போக்குவரத்து மீளமைப்புக்கு தூரநோக்குடன் செயப்படுமாறும் அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435