ஒன்றிணைந்த கல்விச்சேவையை உருவாக்குவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து திட்டமொன்றை தயாரிப்பதற்கு சட்ட வல்லுநர்கள் மற்றும் விடயசார் புத்திஜீவிகளை கொண்ட குழுவை நியமிக்க கல்வியமைச்சு திர்மானித்துள்ளது.
கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில்சார் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்தல், சேவைப்பாராட்டுதலை பன்முகத்தன்மை மற்றும் வௌிப்படைத்தன்மையுடன் நிறைவேற்றுதல், சேவை மேம்படுத்தல், திருப்தி நிலையை மேம்படுத்துவதனூடாக செயற்றிறன் மிக்க சேவையை வழங்கக்கூடிய வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விச்சேவை சார்ந்தோர் மற்றும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோருக்காக இந்த ஒருங்கிணைந்த சேவையை உருவாக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதனூடாக கல்விச்சேவை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆ