ரூபா 50 அடுத்த மாதம் தொடக்கம்?- திகாம்பரம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா சம்பளம் அடுத்த மாத சம்பளத்துடன் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலார்களுக்கு அதிகரிக்கப்பட்ட 50 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தனது அமைச்சினூடாக 50 ரூபாவை வழங்குவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க உறுதியளித்த போதிலும் கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார். அவர் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர். அவர் அதனை மறந்துவிட்டார்.

நானும் அமைச்சர் மனோ கணேசனும் எவ்வாறாயினும் அதிகரிக்கப்பட்ட 50 ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்போம். தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபா சம்பள உயர்வு பிரச்சினையை காட்டி, ஏமாற்றி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். அவ்வாறு கூறித் திரிபவர்கள் 20 ரூபாவை மாத்திரமே வாங்கிக் கொடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க திணைக்களம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளை வௌியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435