சட்டவிரோதமாக நியுசிலாந்து செல்ல முயன்ற 15 பேர் கைது

இலங்கை கடற்படை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  சட்டவிரோதமாக நியுசிலாந்து செல்ல முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (05) நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக நியுசிலாந்து செல்லும் நோக்கில் வானில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பதிலேயே இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது சாரதியுடன் 16 பேர் வேனில் பயணித்துக்கொண்டிருந்திருந்தனர் என்றும் பயணித்த வேன் கைப்பற்றப்பட்டு தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

19 வயதுக்கும் 45 வயதுக்கும் உட்பட்ட குறித்த சந்தேகநபர்கள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகைளை இலங்கை கடற்டையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான சட்டங்களும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் சட்டவிரோத மனிதக்கடத்தற்காரர்களின் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

SrilankaNavy/வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435