இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

இன்று (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானையும் நேசி என்ற வேதாகம வசனம் கூறுகிறது. அது போல இவ்வுலகில் நீயும் வாழ்ந்து மற்றவர்களும் வாழ வழிகொடு என்பதை வழியுறுத்துவதே இந்த மனித உரிமைகள் தினமாகும்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு. ஐநா உருவாக்கப்பட்ட மறுவருடம் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. 53 நாடுகள் அங்கம் வகிக்கும் இவ்வாணைக்குழுவில் முதல்பணி சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்கவேண்டும் என தீர்மானித்தமைக்கு அமைவாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் மனைவியான எலினாவின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவானது 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளங்கண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது. 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி இப்பிரகடனத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 58 நாடுகளும் அங்கீகாரம் வழங்கியது. இத்தினமே 1950ம் ஆண்டு தொடக்கம் மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் பல்வேறு தொனிப்பொருள்களில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய 2019ம் ஆண்டின் தொனிப்பொருளாக ‘மனித உரிமைகளுக்கான இளைஞரின் பங்களிப்பு’ கொள்ளப்பட்டுள்ளது.

உலகை மாற்றுவதற்கு வயது ஒரு தடையல்ல என்று அரைக்கூவலுடன் இளைஞர்களின் பங்களிப்புடன் உலகில் இன, மத பேதம், நிற பேதமின்றி அனைவருக்கும் அவரவர் உரிமைகளுடன் சிறந்து வாழும் உலகை உருவாக்கதே இன்றைய தேவை என்கிறது ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435