குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியை கொண்ட ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை ஒன்றை அரசாங்கத்தின் திணைக்களம் என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில், சமூகப் பொருளாதார துறைகளில் சாதாரண தரத்தில் சித்தியடைந்த இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேர் இதற்கு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைவாக புதிய யோசனை சிலவற்றுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த நியமணங்களில் அரசியல் பாரபட்சம் இடம்பெறாது என்றும் இணை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அரசாங்கம் இதனை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பிலான திணைக்களம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இவர்களுக்கு சிறிது காலம் பயிற்சி வழங்கி நாடு தழுவிய ரீதியில் நிலவும் குறைபாடுகளுக்கு இணங்க போக்குவரத்து, கல்வி, விவசாயம், பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பயிற்சி தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேரை இணைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை நிறுவுதல்
அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களின் பயிற்சியற்ற தொழில் வாய்ப்புக்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகவும் சமூகத்தில் குறைந்த வருமானத்தை கொண்ட குழுவினர் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் மற்றும் ஏனைய அனுசரனைகளின் அடிப்படையில் இவ்வாறான தொழில் வாய்ப்புகளுக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் அதிமேதகு ஜனாதிபதியினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியை கொண்ட ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி ஒரு பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை ஒன்றை அரசாங்கத்தின் திணைக்களம் என்ற ரீதியில் ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
இந்த பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவுக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளுதல் ஒழுக்க விதிகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வதற்கும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதியளவில் இந்த திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் செலவுகளை அறவிடும் அடிப்படையில் இந்த பணிக்குழுவின் சேவையை அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் தனியார் துறையினருக்கும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.