இலங்கையின் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

நிரம்பல் மற்றும் கேள்வி காரணிகளின் காரணமாக இலங்கையின் தேயிலை உற்பத்தி 2016 ஆம் ஆண்டில்; கணிசமான வீழ்ச்சியை காட்டியிருந்தது.

மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தேயிலை உற்பத்தியானது 2015 இன் 328.8 மில்லியன் கி.கிராமிலிருந்து 2016 இல் 292.6 மில்லியன் கி.கிராமிற்கு 11.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

மொத்த தேயிலை உற்பத்தியில் ஏறத்தாழ 63.0 சதவீதம் வகைகூறிய தாழ்நில தேயிலை உற்பத்தியானது 183.6 மில்லியன் கி.கிறாம்களுக்கு 9.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த அதேவேளை உயர்நில மற்றும் மத்தியநிலத் தேயிலை என்பன முறையே 64.4 மில்லியன் கி.கிறாம் மற்றும் 44.5 மில்லியன் கி.கிராம்களுக்கு 14.6 சதவீதம் மற்றும் 12.7
சதவீதத்தில் வீழ்ச ;சியை பதிவுசெய்திருந்தது.

இவ்வீழ்ச்சிக்கு நிரம்பல் மற்றும் கேள்விப்பக்க காரணிகள் பங்களிப்பு செய்திருந்தன. நிரம்பல் பக்கத்தில், 2016, இன் ஆரம்பத்தில் தேயிலை பயிர்ச் செய்யப்படும் பிரதேசங்களில் நிலவிய நீண்ட கால வரட்சி, 2016 நடுப்பகுதியில் மேக நிலைமைகளுடன் வானிலை போக்குகளிலான மாற்றம் மற்றும் 2016 இன் இறுதிக் காலாண்டில் நிலவிய மோசமான வரட்சி நிலைமை என்பன தேயிலை உற்பத்தியின் மீது பாதகமான தாக்கத்தைச் செலுத்தியிருந்தன.

கேள்விப் பக்கத்தில் உலக சந்தையிலான பண்டங்களின் குறைந்தளவான விலைகள் மற்றும் முக்கிய தேயிலை ,றக்குமதி செய்யும் நாடுகளின் எரிபொருள் மற்றும் வாயு போன்றவற்றிலிருந்தான வருவாய்களின் வீழ்ச்சி 2016 இல் தேயிலைக்கான கேள்வியை பாதகமாக பாதித்திருந்தன.

இதேவேளை, சிறு உடமையாளர் தேயிலைத் துறையானது 2016,ல் மொத்த தேயிலை உற்பத்தியில் 74.5 சதவீதத்திற்கு பங்களிப்புச் செய்து தொடர்ச்சியாக முக்கியமானதொரு இடத்தை வகித்திருந்தது.

உயர், மத்திய மற்றும் தாழ்நில தேயிலைகளின் விலையானது கொழும்பு தேயிலை ஏலத்தில் 2015 இல் பதிவுசெய்யப்பட்ட அதேமாதிரியான விலைக்கு மேலாக ஆண்டு முழுவதும் காணப்பட்டது. அதன்படி, கொழும்பு தேயிலை ஏலத்தில் தேயிலைக்கான சராசரி விலையானது முன்னைய வருடத்தில் கி.கிராமொன்றிற்கு பதிவுசெய்யப்பட்ட ரூ.401.46
இலிருந்து 2016 இல் ரூ.473.15 ,ற்கு 17.8 சதவீதத்தால் அதிகரித்தது.

கொழும்பு தேயிலை ஏலத்தில் சராசரி தேயிலை விலையை பொறுத்தமட்டில் உயர்ந்தளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பானது மத்தியநிலத் தேயிலைக்கு (17.6 சதவீதம்) பதிவாகியிருந்ததுடன் அதனைத் தொடர்ந்து தாழ்நிலத் தேயிலை (17.4 சதவீதம்) மற்றும் உயர்நிலத் தேயிலை (16.5 சதவீதம்) என்பன பதிவுசெய்திருந்தன.

கி.கிராமொன்றிற்கான சராசரி ஏற்றுமதி விலையானது 2015,ன் ஐ.அ.டொலர் 4.37 இலிருந்து 2016 இல் ஐ.அ.டொலர் 4.39 இற்கு 0.6 சதவீதத்தால் சிறிதளவால் அதிகரித்திருந்தது. எனினும், உள்நாட்டு தேயிலை ஏற்றுமதியாளர்கள் 2016 காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கு
எதிராக இலங்கை ரூபாவானது 3.8 சதவீதத்தால் தேய்வடைந்ததிலிருந்து நன்மையடைந்திருந்ததுடன் ரூபாவிலான ஏற்றுமதி விலையானது கி.கிராமொன்றிற்கு 2015 இன் ரூ.593.08 இலிருந்து 2016 இல் ரூ.639.88 இற்கு 7.9 சதவீதத்திலானதொரு அதிகரிப்பை பதிவுசெய்திருந்தது.

பச்சைச் தேயிலைக் கொழுந்திற்கு சிறு உடமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட சராசரி விலையானது கி.கிராமொன்றிற்கு 2015 இன் ரூ.58.80 இலிருந்து 2016 இல் ரூ.68.53 இற்கு அதிகரித்திருந்தது.

உலக சந்தை நிலைமையானது முன்னேற்றமடைந்தாலும், 2017 இல் அத்தகைய முன்னேற்றத்திலிருந்தான பூரணமான நன்மைகளை அடைந்து கொள்வதற்கு உள்நாட்டு நிரம்பலின் இறுக்கத் தன்மை மற்றும் அதிகரித்துச் செல்லும் உற்பத்திச் செலவு என்பன உள்நாட்டு தேயிலைக் கைத்தொழிலுக்கு சவாலாக காணப்படக்கூடும் என மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435