இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தில் பதிவு செய்து வௌிநாடு சென்றவர்களுடைய பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.
தென்மாகாணத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கும் இந்நிகழ்வானது வெலிகம நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 419 பிள்ளைகளுக்கு 10,440,000.00 நிதியுதவி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்த 109 பேருக்கு தலா 20,000 ரூபா வழங்கப்பட்டது. இதற்காக 10,440,000.00 ரூபா நிதியொதுக்கப்பட்டது. பொதுதராதர பரீட்சையில் சித்தியடைந்த 259 பேருக்கு 6,475,000.00 ரூபா நிதியை தலா 25,000 ரூபா வீதமாகவும் உயர்தரம் சித்தியடைந்த 51 பேருக்கு 1,785,000.00 ரூபா நிதியை தலா 35,000 ரூபா வீதமும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் 2755 பிள்ளைகளுக்கு 6,876,000.00 ரூபா நிதியை 2019ம் ஆண்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று பணியகம் அறிவித்துள்ளது.