நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு இதனால் இவர்களது சேமநலன் தொடர்பிலான வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்டத் தொழிற்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தேயிலையை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஆகக்கூடிய தரத்தைக் கொண்ட தேயிலையை வழங்குவதன் மூலம் சிலோன் ரீ நாமத்தை மீண்டும் சர்வதேச ரீதியில் உயர்வான நிலைக்கு முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கை தேயிலை சபைக்கு சமீபத்தில் விஜயம் செய்த அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். தேயிலை உற்பத்தியாளர்கள், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சேமநலன்களுக்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிற்துறை மாத்திரமன்றி தேசிய தொழிற்துறையையும் மேம்படுத்துவதற்காக பாரிய அளவிலான ஆர்வத்தை முன்னெடுப்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்கமாகும்.
இதற்கு அமைவாக எதிர்வரும் தொலைநோக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் சவால்களும் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
மூலம் – அரசாங்க தகவல் திணைக்களம்
வேலைத்தளம்