இலங்கை -சீன தொழிற்சங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கத்திற்கும் (National Union Of seafarers – Sri Lanka (NUSS) ஷெங்டோ பிராந்திய தொழிற்சங்க சம்மேளனத்திற்கும் (Shandong Provencial Fedaration Of Trade Union – ACFTU) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

உலக பொருளாதார பின்னணியில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாட்டில் நியாயமான சுற்றுச்சூழலை உருவாக்கும் போது தொழிற்செய்வோரின் உரிமை தொடர்பில் இரு தரப்பினரும் ஒரே மாதிரியான சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் உலகில் தொழிற்சங்கங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை கட்டியெழுப்பி, அதனூடாக தொழில்வர்க்கத்தின் பலத்தை மென்மேலும் மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்று இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, ஷெங்டோ பிராந்திய தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை துறைமுக ஊழியர்கள் தேசிய சங்கம் என்பன தமது தொழிற்சங்கத்துறை வசதிகள், அனுபவங்கள் பரிமாற்றம் செய்து உதவிகள் வழங்கி எதிர்காலத்தில் செயற்படுவதாக 7ம் சரத்துக்கமைய இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435