வர்த்தமானி அறிவித்தலை புரிந்துக்கொள்ளாத பட்டதாரிகள்

வட மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கோரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் பல பட்டதாரிகள் உள்ளனர் என்று வட மேல் மாகாண கல்வியமைச்சர் சந்தயா குமார ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானியில் விண்ணப்பப்படிவத்துடன் பட்டதாரி சான்றிதழின் பிரதியை அனுப்புமாறு கோரப்பட்டிருந்தபோதிலும் சுமார் 700 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அதற்குப் பதிலாக பட்டமளிப்பு விழாவின் போது வழங்கப்பட்ட சான்றிதலின் பிரதியை இணைத்துள்ளனர் என்று அமைச்சர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் குருணாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர். இப்பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் நோக்கிலேயே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. பட்டப்படிப்பின் :போது வழங்கப்படும் சான்றிதழில் பெற்ற பட்டம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் என்னென்ன பாடங்கள் கற்றுள்ளனர் என்பதை அறிந்துகொள்வதற்கு பட்டதாரி சான்றிதழே அவசியம். இதனைக்கூட புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் பல பட்டதாரிகள் உள்ளனர். இது கவலைக்குரிய விடயம்.

இம்முறை ஆயிரம் பேரை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. விரைவில் மேலும் ஐந்நூறு பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435