ஓய்வூதியம் பெற்றுள்ள 640,000 பேருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஓய்வூதிய அட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஓய்வு பெற்றோர் சங்க அங்கத்தவர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
வருடாந்தம் சுமார் 25,000 பேர் ஓய்வுபெறுகின்றனர். மாதாந்தம் 2000 பேர் ஓய்வு பெறுகின்றனர். ஓய்வு பெற்ற 640,000 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் 1900 கோடியை அரசாங்கம் செலவிடுகிறது என்று் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.