சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் எஜமானர்களுக்கு நன்மைப்பயக்கும் வகையில் உருவாக்கியுள்ள போலியான கண்ணியமான வேலைக்கு (Decent Work) எதிராக நேற்று (21) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளன அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், இலங்கை வர்த்தக கைத்தொழில் ஊழியர்கள் சங்கம், இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன.
இதேவேளை, அரசாங்க வங்கிகளை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (22) இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தினால் கொழும்பில் அமைந்துள்ள வங்கி ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.