ஆயிரம் ரூபா சம்பள உயர்வு எங்களுக்கும் கிடைக்குமா?

மலைநாட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க தீர்மானிக்கப்பட்டபோதிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறுதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பளம் உயர்த்துவது சாத்தியமில்லை என்றும் இதனால் அத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெற்கு சிறுதேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ருவன் கலகே தெரிவித்துள்ளார்.

நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சங்கத்தின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தெற்கிலுள்ள சுமார் 25 தொடக்கம் 50 ஏக்கர் வரையான சிறுதேயிலைத்தோட்டங்களில் சுமார் 200,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு இச்சம்பள உயர்வு சாத்தியப்படாது. பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணியாற்றும் இத்தொழிலாளர்கள் குறித்த சம்பள உயர்வை பெறாதிருப்பது பெரும் அநீதியாகும்.

ஆரம்பக்காலங்களில் அரச தோட்டங்களாக இருந்து பின்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இச்சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் பல இன்னல்களுக்கு மத்தியில், மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்து அன்றாட வாழ்வை கொண்டு செல்லும் தெற்கு சிறு தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர் பிரச்சினை குறித்து கதைப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டுவதும் இல்லை.

சுரண்டல்களுக்குட்படுத்தப்பட்டு, நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய பொறிமுறையொன்று அறிமுகப்படுத்துவது அவசியம் என்று சங்க அமைப்பாளர் சமில அபேசேக்கர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435