நியமனம் வழங்காவிட்டால் மாகாணம் தழுவிய போராட்டம்- கிழக்குப் பட்டதாரிகள்

எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் நியமனம் வழங்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே. அனிதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் அடுத்த மாதம் இரண்டாம் வாரமளவில் நாம் போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டியேற்படும்.

உள்வாரி, வௌிவாரி, உள்நாட்டுப் பட்டம், வௌிநாட்டுப்பட்டம் மற்றும் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று நாம் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

தேர்தல் நெருங்கினால் தேர்தலை காரணம் காட்டி நியமனங்கள் இழுத்தடிக்கப்படும். எனவே பொதுத்தேர்தலுக்கு முன்னர் எங்களுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுங்கள். ஒரு இலட்சம் சமுர்தி பயனாளிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் குறித்து பொருட்படுத்தாமல் இருப்பது எமக்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435