சாரதி அனுமதி பத்திரத்திற்கு தேவையான மருத்துவ பரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் என்பன இன்று (27) தொடக்கம் ஒன்லைன்னில் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையம் இந்நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
www.ntmi.lk என்ற இணையத்தளத்தில் இத்தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பதாரியின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் வெளியிடப்படும். இதேவேளை அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கையடக்க தொலைபேசிகளில் இதற்கான விசேட செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.