சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வர விமானக்கட்டணத்தில் 50 வீத சலுகை வழங்க ஶ்ரீலங்கா எயார்லைனஸ் முன்வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு இச்சலுகையை வழங்க ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்வந்துள்ளது.
பெய்ஜிங், கெண்டன் ஆகிய நகரங்களில் இருந்த இலங்கை வரும் மாணவர்களுக்கு உடனடியாக 50 வீத சலுகை நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள +94 777771979 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
பீஜிங் மற்றும் கென்டனில் இருந்து வழக்கமாக வரும் விமானங்களின் மூலம் நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50% தள்ளுபடியை வழங்குவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
அது தவிர தற்போது சீனாவில் உள்ள மாணவர்களுக்காக பிரத்தியேக விமானமொன்றை அனுப்புவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.
இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணி நேரம் இயங்கும் +86-10-65321861/2 எனும் இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொலைபேசி மூலம் சீனாவிலுள்ள இலங்கையர் மற்றும் அவர்களது உறவினர்கள் தகவல்கள் மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.