வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் பிள்ளைகள் தொடர்பில் அலரிமாளிகையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் தங்கியிருந்து 1.5 மில்லியன் பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.
அவர்களினால் நாட்டிற்கு அதிகளவான வருமானம் கிடைக்கின்றது.
எனவே, அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அவர்களுக்கு சிறந்த முறையில் கல்வியினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் .
அதேவேளை, அவர்களின் உறவினர்களும் குறித்த சிறார்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜக்ஷ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கலாசாரத்தை இல்லாது செய்து நாட்டை அபிவிருத்தியை நோக்கிய முன்னெடுத்து செல்ல சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.