தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பானது வெறுமனே பொய்யான தேர்தல் வாக்குறுதியல்ல. உறுதியளித்தமைக்கு அமைய மார்ச் மாதம் தொடக்கம் வழங்கப்படும். மார்ச் மாதத்திற்கான சம்பளம் ஏப்ரல் 10ம் திகதி வழங்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1000 ரூபா மாதந்த சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப் போவதாக உறுதியளித்தார். மார்ச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அச்சம்பளம் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வழங்கப்படும். இதற்கிடையில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தல் ஆணைக்குழு தலையிட்டு இதனை நிறுத்தக்கூடும். இதற்கு முன்னர் அவ்வாறு நடந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பள உயர்வுக்கான அமைச்சரவை அனுமதியை ஜனாதிபதி பெறுவாரானால் அது நன்மையானது.
தற்போதைக்கு 22 கம்பனிகள் இச்சம்பள உயர்வை வழங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது மிகவும் இலகுவான வேலை. இந்நாட்டில் 240- 740 தோட்டத் தொழிலாளர்களே உள்ளனர். அதனை அரசாங்கம் சட்டரீதியாக்கினால் (அமைச்சரவைத் தீர்மானம்) கம்பனிகள் செலுத்தியேயாகவேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடயே ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டமையினால் ஜனவரி மாதம் முதலான நிலுவையுடன் ஆயிரம் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் தமிழர்கள் அல்ல. 60 வீதமானவர்கள் தமிழர்கள். மிகுதி 40 வீதமானவர்கள் சிங்களவர்கள். தற்போது காணப்படும் வாழ்க்கை செலவு அதிகரிப்பை கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு சம்பள அதிகரிப்பை வழஙகவேண்டும்.
கவனத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டியது நாட்டின் கடமை, பொறுப்பாகும். இதற்கு யார் பொறுப்பு யார்? தற்போதைய அரசாங்கமா, கடந்த அரசாங்கமா? தொழிலாளர்களுடன’ விளையாட வேண்டாம். பொய்யான உத்தரவாகங்களை வழங்காதீர்கள். போலியான தேர்தல் வாக்குறுதிகளை வழங்காதீர்கள். ஜனாதிபதி 1000 ரூபாவை வழங்குமாறு உத்தரவிட்டால் உடனே வழங்கப்படும்.
மூலம் – அத தெரண
வேலைத்தளம்