தென்கொரியாவில் கோரோனா வைரஸ் தொற்று (கோவிட் 19) வேகமாக பரவி வருவதையடுத்து அங்கு பணியாற்றிய 137 இலங்கையர்கள் இன்று (01) நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
நாடு திரும்பியவர்களில் இருவருக்கு உடல் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டமையினால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் வாழும் இலங்கையர்கள் குறித்த தென்கொரியாவுக்கான இலங்கை தூதரகம் 24 மணிநேரமும் அவதானத்துடன் இருப்பதாகவும் இதுவரை இலங்கையர்களுக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டமைக்கான பதிவுகள் எதுவும் இல்லையென்றும் தென் கொரியாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி எ. சாஐ் யு மென்டிஸ் அத தெரன இணையதளத்திற்கு தெரிவித்ததாக அவ்விணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
நன்றி – அத தெரண