தேர்தல் காலத்தில் தமக்கான நியமனக்கடிதங்களை வழங்க சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தேர்தல் ஆணையாளருக்கு நேற்று (02) கடிதமொன்றை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு பின்னர் வேலையற்ற பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இச்செயற்பாட்டை தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலைக்கப்படட பின்னர் நியமனக்கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படுகின்றமையினால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.