ஆசிரியர் சேவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்சி பெறுவது கட்டாயம் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வதிவிடப்பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி முதற்கட்ட பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியுடன் பயிற்சி நிறைவடையவுள்ளது.
இரண்டாம் கட்ட பயிற்சிகள் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சியில் 435 ஆசிரியர்கள் பங்குபற்றவுள்ளனர்.
மஹரகம தேசிய கல்விக் கல்லூரி, கண்டி மகாவெலி தேசிய கல்விக் கல்லூரி, வேயங்கொட சியனே தேசிய கல்விக் கல்லூரி, களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக்கல்லூரி மற்றும் வவுனியா தேசிய கல்விக் கல்லூரி என்பவற்றில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சிகள் 1035 ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் பயிற்சிக்கான கடிதங்கள் கிடைத்தவுடன் குறித்த பயிற்சி நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு கல்வியமைச்சு கோரியுள்ளது.
வேலைத்தளம்