பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு தடை விதிக்காது என பிரதித் தேர்தல் ஆணையாளர் சமன் ரத்னாயக்க தேசிய நாளிதழான தினகரனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்குதல் போன்ற திட்டங்களை முன்னெடுப்பதில் எந்தச் சிக்கலும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் செயற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றம் கலைக்கப்படும் நிலையில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதல், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் என்பவற்றை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா என வினவியதற்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று முதல் அனுப்பப்பட்டு வருவதோடு ஒரு பகுதியினருக்கு நேற்று கடிதங்கள் கிடைத்துள்ளன.பாராளுமன்றம் கலைக்கப் படுவதோடு இந்த செயற்பாடுகள் தடைப்படலாமென அச்சம் எழுந்துள்ளது.
நன்றி – தினகரன்