நெரிசலால் தடுமாறும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பிரதேசம்

ஊரடங்கு சட்டம் காரணமாக தங்குமிடங்களில் இதுவரை சிக்கியிருந்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு ஓரிடத்தில் கூடியமையினால் கடுமையான நெருக்கடி மற்றும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் எதிர்பார்த்ததை விடவும் அதிக எண்ணிக்கையானவர்கள் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் அருகில் கூடியுள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று கைத்தொழில் ஏற்றுமதி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமானசேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் முதலீட்டு ஊக்குவிப்புச்சபை உயரதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தகத்தில் பணியாற்றிய ஊழியர்களில் சுமார் 500 பேர் மட்டுமே வீடுகளுக்கு செல்ல முடியால் தங்குமிடங்களில் சிக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனவே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள இன்று (27) நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் தற்போது ஆயிரக்கணக்கானவர்கள் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பிரதான வாயிலருகில் கூடியிருப்பதாகவும் நகரம் பூராவும் அவர்கள் பரவியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அப்பிரதேசத்தில் கடுமையான நெரிசல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435