கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை நிவாரணக் கொடுப்பனவு

புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை 2016 ஏப்ரல் மாதம் வரை கணக்கெடுக்கப்பட்டு 2500 ரூபா நிவாரணக் கொடுப்பனவை தோட்டத் தொழிலாளருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

நேற்று (02) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கொருளாதார முகாமை குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டது.

இதற்கமைய புதிய கூட்டு ஒப்பந்த கணக்கெடுப்பானது கடந்த 2015 மார்ச் 31 ஆம் திகதியிலிருந்த நிலுவையுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு…

1. 2016 ஏப்ரல் முதல் கணக்கெடுக்கப்பட்டு ரூ. 2500 இடைக்கால நிவாரண கொடுப்பனவு தோட்ட தொழிலாளருக்கு, புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் வரை வழங்கப்படும். புதிய கூட்டு ஒப்பந்த கணக்கெடுப்பு 2015 மார்ச் 31ம் திகதியில் இருந்து நிலுவையுடன் ஆரம்பிக்கப்படும்.

2. இதன் மூலம் தோட்ட தொழிலாளருக்கான இன்றைய நாட் சம்பளம் ரூ. 620 உடன் ரூ. 100 மேலதிகமாக சேர்க்கப்பட்டு ரூ.720 வழங்கப்படும்.

3. இந்த மேலதிக தொகையை வழங்க, தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு, அரச வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பொறுப்பு திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

4. வெகு விரைவில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, புதிய தொகை சம்பளமும், 2015 மார்ச் 31ம் திகதியிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு நிலுவை சம்பளமும் வழங்கப்படும்.

5. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை நடவடிக்கையை நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்நடத்துவார்.

6. விரைவில் தொழிலாளருக்கு பயிர் காணிகள் பிரித்து வழங்கும் புதிய தொழில் முறைமையான, வெளி ஒப்பந்த முறைமை பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முகாமை நிறுவனங்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படும்.

பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசாநாயக்க மற்றும் திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கம் உட்பட அரச அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435