கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச ஊழியர்களின் சேவைகளுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் அரச ஊழியர்களின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணையத்தளங்களில் அவ்வாறான காணொளிகளை பதிவிடுபவர்களை கைது செய்யுமாறும் பதில் காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.