
பதவிகளை ஒன்றிணைத்தமை மற்றும் புதிய யாப்பு என்பற்றினூடாக முகாமைத்துவ உதவியாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமையினால் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அகில இலங்கை பொது முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவிக்கையில், குறித்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்று தருமாறு அதிகாரிகளை கோரிய போதிலும் இதுவரை தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்/ அத தெரண