ஊரடங்கு சட்ட காலத்தில் அதிகரிக்கும் வீட்டு வன்முறை

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட அதிகளவானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அதன் பயிற்சி பிரிவின் பொறுப்பதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்ஷா தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்துள்ள அவர்,

சாதாரண காலப்பகுதியில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் திடீர் விபத்து பிரிவிற்கு 275 முதல் 280 பேர் வரையில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், அந்த எண்ணிக்கை 75, 80, 90 ஆக உள்ளது.

எனினும், வீட்டில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் வீட்டு வன்முறைகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் உள்ளது.

பெருமளவான சந்தர்ப்பங்களில் பெண்கள் அதிகளவில் வன்முறையினால் பாதிக்கப்படும் நிலை உள்ளதுடன், ஆண்கள்கூட தாக்குதலுக்குள்ளான சம்பவங்களும் பதிவாகின்றன.

இவ்வாறாக வீட்டில் இடம்பெறும் விபத்துகளினால் பெண்களும், ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

வீடுகளில் உள்ள உறுப்பினர்கள் ஒன்றாக சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவது குறைவு.

எனினும், தற்போது ஊரடங்கு சட்;டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் முழு குடும்பத்தினரும் வீட்டில் இருப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையில் தெளிவான மாற்றத்தை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய மருத்துமனையின் பயிற்சி பிரிவின் பொறுப்பதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435