உலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிதியளிப்பதை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பதிலளித்ததில் உலக சுகாதார அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றது.
சீனாவில் வைரஸ் உருவான பின்னர் ஐ.நா. அமைப்பு தவறாக நிர்வகித்து, அதை மூடிமறைத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டியதுடன், பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்புக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் டொலர் நிதியை வழங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.